மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர்கள் எங்கே..?அன்று பேட்டியில் சொன்னபடி டாக்டர், இன்ஜினியர் ஆனார்களா..?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் எடுத்த மாணவர்கள், தங்களது லட்சியப் பயணத்தை அடைந்தார்களா? இல்லையா? இப்போது அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பதை அலசுகிறது இந்த தொகுப்பு...
குழந்தைகளை நல்வழிப்படுத்தவும், ஒழுக்கத்துடன் வளரவும், வாழ்க்கையில் முன்னேறவும் மிக முக்கியமானது கல்வி. அப்படிப்பட்ட கல்வியில், மிக முக்கியமான தருணமாக இருப்பதோ, பத்து மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒரு மாணவனின் எதிர்கால பாதையை தீர்மானிக்கிறது என்றால், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வோ, அவனது லட்சியத்தையே தீர்மானிக்கிறது. ஏற்கனவே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள், தங்களது இலக்கை அடைந்தார்களா? என்றால், அதற்கு கால சூழலும், குடும்ப சூழலும்தான் கைகொடுக்கிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆயிரத்து 200க்கு, ஆயிரத்து 197 மதிப்பெண்களை எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்த திருத்தணியை சேர்ந்த ஜஸ்வந்த் என்ற மாணவன் தனது இலக்கு மருத்துவர் ஆவதே என்று கூறினார்.
2016ஆம் ஆண்டு +2 தேர்வு முடிவுகள்
தமிழ் = 199/200
ஆங்கிலம் = 197/200
கணிதம் = 200/200
இயற்பியல் = 199/200
வேதியியல் =200/200
உயிரியல் = 200/200
மொத்தம் = 1195/1200