மக்களவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன், மத்திய அரசுக்கு அதிகமான நிதி வருவாய் வழங்குவதில் இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது என்றார்.
ஆனால் நிதி பகிர்வில் தமிழ்நாடு மிகவும் குறைவான நிதியை பெறும் நிலை உள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார்.
மதுரையில் எய்ம்ஸ் பணிகள் எப்போது தொடங்கும் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.