"என்ன நடந்தாலும்.. நான் ஒன்னு மட்டும் சொல்றேன்..." - சசிகலா பரபரப்பு பேட்டி

Update: 2023-04-14 06:27 GMT

ஆளுநர் மோதலை பெரிதாக மாற்றுவதை விட்டு விட்டு எடுத்து கூறி மக்களுக்காக நல்லதை செய்ய வேண்டும்.

எதிர்கட்சியாக பிரச்சினைகளை சரியான நேரத்தில் எடுத்து சொல்லாமல் உள்ளனர்.

அதிமுக உட்கட்சி பூசலை திமுக பயன்படுத்தி வருகிறது, அனைவரும் ஒன்று சேர கூடாது என திமுக செயல்பட்டு வருகின்றனர்.

ஓபிஎஸ் தீர்மானம் குறித்து பேசுகிறார்,உடனடியாக அதிமுகவை சார்ந்த நபர்கள் எப்படி பேச விடலாம் என கேட்கின்றனர் அதற்கு சபாநாயகர் முன்னாள் முதல்வர் என்ற முறையில்தான் பேச சொன்னேன் என கூறினார் அவர் அதிமுக அதனால் பேச சொன்னேன் என கூறவில்லை.

திமுக எப்போதும் இரண்டு வண்டியில் மட்டுமே பயணம் செய்வார்கள், ஓபிஎஸ் விவகாரத்தில் சட்டசபையில் திமுக இரட்டை வேடம் போடுகின்றனர்

- சசிகலா.

Tags:    

மேலும் செய்திகள்