பனி மூட்டம் போல் பொங்கி வழிந்த தண்ணீர் - சேலத்தில் பரபரப்பு | Salem

Update: 2023-05-10 15:39 GMT

சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவு நீரால் திருமணிமுத்தாற்றில் நுரை பொங்கி வழிந்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சேலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால், திருமணிமுத்தாற்றில் மழை வெள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையில், சாயப்பட்டறைகளில் சுத்திகரிப்பு செய்யப்படாமல் தேக்கி வைக்கப்படும் ரசாயன கழிவுநீர் திருமணிமுத்தாற்றில் அப்படியே திறந்துவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் திருமணிமுத்தாறில் ஆங்காங்கே வெள்ளை நிறத்தில் நுரைபொங்கி வருகிறது. ஆற்றில் அசுத்தமான நீர் வருவதால், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்து, நிலத்தடி நீர் மாசடைவதோடு, விளைநிலங்களும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தோல் வியாதி, மூச்சுத்திணறல் போன்ற உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதால், இவற்றை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்