விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கு... போலீசாருக்கு பறந்த உயர் நீதிமன்ற உத்தரவு

Update: 2023-02-20 16:23 GMT
  • விழுப்புரம் அன்பு ஜோதி இல்லத்துக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • அன்பு ஜோதி இல்லத்தில் ஆட்கள் மாயம் மற்றும் பாலியல் புகார்கள் எழுந்த நிலையில், இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இவ்விவகாரம் தொடர்பான ஆட்கொணர்வு மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
  • அப்போது காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆசிரமத்தில் ஆய்வு செய்துள்ளதாகவும்,
  • சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில்,
  • வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்