திருமணம் முடிந்த மறுநாளே வந்த சோதனை.. மன்னிப்பு கடிதம் எழுதிய விக்னேஷ் சிவன்

திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் காலணி அணிந்து சென்ற தவறுக்காக, தாம் மன்னிப்பு கோருவதாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு விக்னேஷ் சிவன் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2022-06-11 02:07 GMT

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி கோயிலின் முன்பு போட்டோ ஷூட் நடத்தினர். அப்போது அவர்கள் காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் காலணியுடன் போட்டோ ஷூட் நடத்தியது விவாதப் பொருளாக மாறியது. இதுதொடர்பாக தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் தொலைபேசி மூலம் விஷ்ணு சிவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் இது தெரியாமல் நடந்த தவறு என்றும், மன்னிப்பு கேட்கும் வகையில் கடிதம் அல்லது வீடியோ ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வெளியிடுவதாகவும் விக்னேஷ் சிவன் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், தேவஸ்தானத்திற்கு விக்னேஷ் அனுப்பிய கடிதத்தில், திருமணம் நடந்தபின் வீட்டுக்கு கூட செல்லாமல் நேரடியாக திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானின் கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டதாகக் கூறியுள்ளார். தங்களைப் பார்த்தால் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்பதால், விரைவாக போட்டோசூட் நடத்தி அங்கிருந்து வெளியேற முடிவு செய்ததாகவும், அந்த பரபரப்பில் தடை விதிக்கப்பட்ட பகுதியில் காலணியுடன் நடமாடியதை கவனிக்க தவறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்