அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.. காயங்களுடன் தப்பிய வாகன ஓட்டிகள் - சென்னையில் பரபரப்பு
செம்பரம்பாக்கம் அருகே பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முன்னால் அதி வேகமாக சென்ற வாகனம் பிரேக் அடித்ததால், அதை பின் தொடர்ந்து வந்த ஐந்து வாகனங்கள் அடுத்தடுத்து மோதின. இந்த விபத்தில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு தண்டலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன நெரிசலை போக்குவரத்து போலீசார் சரி செய்தனர்.