கோவை ஈச்சனாரியில் டூ பழனி வரை - வானதி சீனிவாசன் பாதயாத்திரை நிறைவு

Update: 2023-02-03 03:56 GMT

பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், பாதயாத்திரையாக பழனி கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.

கடந்த 30-ஆம் தேதி, கோவை ஈச்சனாரி விநாயகர் கோயிலில் இருந்து யாத்திரையைத் தொடங்கிய அவர், பொள்ளாச்சி , உடுமலை வழியாக நடந்து வந்து, பழனியை வந்தடைந்தார்.

பழனி சண்முக நதியில் புனித தீர்த்தம் தெளித்துக் கொண்டு, தைப்பூசத் திருவிழா நடைபெறும் பழனி பெரியநாயகி அம்மன் கோயிலிலும், பின்னர் மலைக் கோயிலிலும் சாமி தரிசனம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்