வைகாசி மாத பூஜை.. வரும் 14ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறப்பு
வைகாசி மாத பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. 15ம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படும் எனவும், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் எனவும், தேவசம் போர்டு அறிவித்துள்ளது. மேலும், சபரிமலை நடை திறக்கப்படுவதை முன்னிட்டு, கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.