3 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள்.. காய்கறிகளை வாரி வழங்கிய இஸ்லாமியர் - தைப்பூச விழாவில் நெகிழ்ச்சி சம்பவம்
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையின் தர்மசாலைக்கு 10 டன் காய்கறி மற்றும் அரிசியை இஸ்லாமியர் ஒருவர் வழங்கியுள்ளார்.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையாக வாழ்ந்த வள்ளலார், பசித்திரு தனித்திரு விழித்திரு என்ற கொள்கையின்படி இருந்தவர்.
அவர் வடலூரில் அமைத்த சத்திய ஞான சபை தர்ம சாலையில், மூன்று வேளையும் பல்லாயிரக்கணக்கானோர் உணவருந்தி வருகின்றனர்.
இந்நிலையில், தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெறுவதை ஒட்டி, திருப்பாதிரிப்புலியூரில் காய்கறி கடை வைத்துள்ள பக்கிரான் என்பவர், தர்மசாலைக்கு 10 டன் காய்கறிகள் மற்றும் அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார்.
அவற்றையும், 3 ஆயிரம் குடிநீர் பாட்டில்களையும், சரக்கு வாகனம் மூலம் தர்மசாலைக்கு அனுப்ப வைத்தார்.
இஸ்லாமியரான பக்கிரான், மதங்களை கடந்து உணவுப் பொருட்களை வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.