தமிழகத்தை உலுக்கிய வாச்சாத்தி பாலியல் வன்முறை சம்பவம் - நீதிபதி எடுத்த அதிரடி முடிவு

Update: 2023-02-28 05:17 GMT
  • தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி வன்முறை வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், மார்ச் 4ஆம் தேதி வாச்சாத்தி கிராமத்தில் நேரில் ஆய்வு நடத்த உள்ளார்.
  • தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி மலைக்கிராமத்தில் சந்தனமரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 1992ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறையினர், போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
  • அப்போது, அந்த கிராமத்தில் இருந்த இளம் பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் 10 ஆண்டு வரை தண்டனை விதிக்கப்பட்டது.
  • இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி வேல்முருகன், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
  • மேலும், மார்ச் 4ஆம் தேதி, சம்பவம் நடந்த வாச்சாத்தி மலை கிராமத்தில் நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய இருப்பதாகவும் நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்