HIV பாதிப்பால் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுத்த மருத்துவர்கள் - வலியில் துடித்த பெண்

Update: 2022-11-23 08:48 GMT

உத்தர பிரதேசத்தில் எச்.ஐ.வி பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மருத்துவர்கள் மறுத்ததால், குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், ஃபிரோசாபாத்தைச் சேர்ந்த 20 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பெண்ணின் பெற்றோர்கள், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க பணம் இல்லாத காரணத்தினால், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பெணுக்கு எச்.ஐ.வி பாதித்திருந்த நிலையில், மருத்துவர்கள் அப்பெண்ணை தொட்டு மருத்துவம் பார்க்க மறுத்துள்ளனர். இதனால், சுமார் ஆறு மணி நேரமாக வலியில் துடித்த அந்தப் பெண்ணுக்கு, குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே உயிரிழந்தது. சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்