கோயில் விருந்து சாப்பிட்ட 3 குழந்தைகள் கவலைக்கிடம்... 18 பேர் மயக்கம் - கதறும் பெற்றோர்

Update: 2023-03-27 08:53 GMT
  • உத்திர பிரதேசத்தில் கோயிலில் உணவருந்திய குழந்தைகள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.உத்திய பிரதேச மாநிலம், பாக்பத்தில் அமைந்துள்ள கோயிலில் மத சமூக விருந்து நடைபெற்றது.
  • இந்த விருந்தில் வழங்கப்பட்ட கிச்சடி சாப்பிட்டதில், குழந்தைகள் உள்பட 21 பேர் மயக்கம் அடைந்தனர்.
  • தகவலறிந்து காவல்துறையினர் மற்றும் சுகாதார துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • கிச்சடி சாப்பிட்ட 21 பேருக்கும் ஃபுட் பாய்சன் (Food Poison)ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.
  • இதில் மூன்று குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மற்றவர்கள் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்