"பணம் அனுப்புங்க..நானே வந்துடுவேன்.." நகைக்கடைகாரர் கடத்தலில் திடீர் திருப்பம்..வெளியான பகீர் ஆடியோ

Update: 2023-06-17 15:23 GMT

ஊத்தங்கரையில் நகைக்கடை நடத்தி வருபவர் குடியரசு. இவர் சில நாட்களாக மாயமான நிலையில், அதே பகுதியில் உள்ள மற்றொரு நகைக்கடை உரிமையாளரான முமது சதாப்பை காவல் துறையினர் என கூறி மர்மநபர்கள் கடத்தியதாக கூறப்பட்டது. இதில், முகமது சதாப் தப்பி வந்ததாக கூறப்படும் வேளையில், மாயமான குடியரசையும் அதே கும்பல்தான் கடத்தியிருப்பதாக அவரின் உறவினர்கள் சந்தேகித்துள்ளனர். இது குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்டு, குடியரசை போலீசார் தேடி வரும் நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட குடியரசு, தனக்கு பணம் அனுப்புமாறு செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்