வாட்ஸ் அப்பில் வந்த அப்டேட்.. எலான் மஸ்க் கொடுத்த ஷாக் தகவல் | Whatsapp update | Elonmusk
ட்விட்டர் 'புளூ டிக்கிற்கு' இனி மாதம் 8 டாலர் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
அமெரிக்க நாவலாசிரியர் ஸ்டீபன் கிங், முன்னதாக ட்விட்டரில் இது குறித்து அதிருப்தி தெரிவித்து இருந்த நிலையில், "தாங்களும் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், விளம்பரதாரர்களை மட்டுமே ட்விட்டர் முழுமையாக நம்பியிருக்க முடியாது என்றும் எலான் மஸ்க் பதில் ட்வீட் செய்துள்ளார். மேலும், ட்விட்டர் 'புளூ டிக்கிற்கு' இனி மாதம் 8 டாலர், அதாவது இந்திய மதிப்பீல் 660 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாகவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ப்ளூடிக் வாங்கும் நாடுகளை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும், இதன்மூலம் பெயர் தேடல் மற்றும் பதில்களில் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்தார். அதோடு, விளம்பரங்கள் பாதியாக குறைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.