போலீஸ்கே தெரியாமல் நடிகர் பிருத்விராஜ் வீட்டில் திடீர் ரெய்டு - ஆவணங்களை அள்ளிச்சென்ற அதிகாரிகள்
கேரளாவில் நடிகர் பிருத்விராஜ், தயாரிப்பாளர்கள் ஆண்டனி பெரும்பாவூர், லிஸ்டின் ஸ்டீபன், ஆண்டோ ஜோசப் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த வருமான வரித்துறையினர் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சோதனை நடத்தினர்.
இந்த வருமான வரி சோதனை குறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
சோதனை தொடர்பாக ஊடகங்களுக்கு பதிலளிக்க அதிகாரிகள் மறுத்து விட்ட நிலையில், சில ஆவணங்களை அவர்கள் எடுத்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.