உக்ரைனுக்கு உதவி... ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் கனடா

Update: 2023-04-12 12:27 GMT
  • உக்ரைனுக்கு புதிய இராணுவ உதவிகள் வழங்கியதோடு, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை கனடா அரசு அறிவித்துள்ளது.
  • டொராண்டோவில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால், கனடா பின்னர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
  • பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரஷ்யாவுடனான போருக்கு உதவியாக உக்ரைனுக்கு அதிக ஆயுதங்களை அனுப்புவோம் என்று அறிவித்தார்.
  • கனடாவில் இருந்து அதி நவீன துப்பாக்கிகள்,
  • மற்றும் 2.4 மில்லியனுக்கும் அதிகமான வெடிமருந்துகளை அனுப்புவோம் என உறுதி அளித்தார். இது உக்ரைனின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், போராடவும் உதவும் என்று கூறினார். அதோடு, ரஷ்யாவை சேர்ந்த 14 தனியார் மற்றும் 34 நிறுவனங்களுக்கும் தடை விதிப்பதாக அறிவித்தார்.
  • ரஷ்ய நிதித் துறையுடன் தொடர்புடைய ஒன்பது நிறுவனங்களுக்கு கூடுதல் தடைகளைஅறிவிப்பதாகவும்,கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்