"டெல்லி செல்லும் முன்.. சென்ற பின்".. ஒரே பாலில் ஈபிஎஸ், அண்ணாமலையை - கிளீன் போல்டாக்கிய உதயநிதி
முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனை திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்க டெல்லி சென்றதாகவும், அதிமுகவினர் கட்சி பிரச்சனை தொடர்பாக டெல்லி சென்றதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஸ் இளங்கோவனை வெற்றி பெறச் செய்ததற்கு நன்றி தெரிவிப்பதற்காக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டிற்கு சென்றார். அவருக்கு திமுக தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையை திறப்பது தொடர்பாக, டெல்லி சென்று குடியரசு தலைவரை சந்தித்ததாக கூறினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர், கட்சி பிரச்சனை தொடர்பாக டெல்லி சென்றதாக விமர்சித்தார்.