"இளைஞர்களுக்கு தொழில் தொடங்க இரண்டு லட்சம்"... "அதிக விளைச்சல் கொடுத்தால் ஐந்து லட்சம் பரிசு.." - வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்
"நம்மாழ்வார் பெயரில் ரூ.5 லட்சம் பணத்துடன் விருது, சிறு தானிய மண்டலங்களில் புதிதாக 5 மாவட்டங்கள் சேர்ப்பு, அதிக விளைச்சல் தரும் விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு, 385 வேளாண் விரிவாக்க மையங்களில் மின்னணு பரிமாற்றம், 200 இளைஞர்களுக்கு வேளாண் தொழில் தொடங்க ரூ.2 லட்சம் நிதி உதவி - ரூ.4 கோடி ஒதுக்கீடு, 100 உழவர் குழுக்களுக்கு இயற்கை இடுபொருள் தயாரிக்க ரூ.1 கோடி மதிப்பீட்டில் திட்டம், அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பணத்துடன் நம்மாழ்வார் விருது, எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு மண்டலம், சூரியகாந்தி, நிலக்கடலை உற்பத்தியை அதிகரிக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு