சென்னை மதுரவாயலில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரட்டை சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் தனது வீட்டின் அருகே நடந்து சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரது செல்போனை பறித்து சென்றனர்.
இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டு, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட போரூரைச் சேர்ந்த சஞ்சீவ், சஞ்சய் ஆகிய இரட்டை சகோதரர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.