2024 அதிபர் தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போட்டியிட உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்...
76 வயதான ட்ரம்பின் ஆவணங்கள் மத்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. இதன்மூலம், 2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முதல் வேட்பாளராக ட்ரம்ப் துணிவுடன் களமிறங்கியுள்ளார்... புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ இல்லத்தில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய ட்ரம்ப், அமெரிக்காவின் மறுபிரவேசம் இப்போதே தொடங்க உள்ளதாக குறிப்பிட்டார். சசீனா, வடகொரியா நாடுகளின் எதிர்ப்புகள், பொருளாதார பாதிப்புகள், எல்லை பிரச்சினைகள் என்று பைடன் ஆட்சியைப் பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், அமெரிக்காவை மீண்டும் மகத்துவமாகவும், பெருமையாகவும் மாற்றும் வகையில், அமெரிக்க அதிபர் பதவிக்கு தான் போட்டியிடுவதை அறிவிப்பதாகத் தெரிவித்தார்.