"ECR வழியில் புதுச்சேரி-சென்னைக்கு ரயில் சேவை" - ரயில் பயணிகள் ஆலோசனை குழு தலைவர் நம்பிக்கை
புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு ரயில் சேவை கொண்டு வருவது குறித்து உயர்மட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் என ரயில் பயணிகள் ஆலோசனை குழு தலைவர் கிருஷ்ணதாஸ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி ரயில்நிலையத்தை புதுப்பிக்க மத்திய அரசு 92 கோடி ஒதுக்கியிருப்பதாக கூறினார்.