காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16-04-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16-04-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;

Update: 2025-04-16 00:46 GMT
  • உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்டமுன்வடிவு.... சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.....
  • சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 17ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.... விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவது, புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனத் தகவல்.....
  • மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய, முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர் மட்ட குழு அமைக்கப்படும்..... குழுவின் இடைக்கால அறிக்கை 2026ம் ஆண்டு ஜனவரியிலும், இறுதி அறிக்கை இரண்டு ஆண்டுகளிலும் சமர்ப்பிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு....
  • நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு சிதைந்து போவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு... மீண்டும் மாநில பட்டியலுக்கு கல்வியை கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தல்...
  • மாநில சுயாட்சி தொடர்பாக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பேசாதது வருத்தம் அளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு... கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று சொல்வார்களே, இது தான் கொள்கையா? என்றும் விமர்சனம்..
  • முதலமைச்சரின் உரைக்கு முன் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு... மாநில சுயாட்சி தொடர்பாக திமுக கண்துடைப்பு நாடகம் ஆடுவதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்....
  • மாநில உரிமை மீட்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு... மாநிலத்திற்கு தனியாக முழு அதிகாரம் கொடுக்க முடியாது என நயினார் நாகேந்திரன் பேட்டி...
  • நெல்லை பாளையங்கோட்டையில், தனியார் பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு... எட்டாம் வகுப்பு மாணவர்கள் இருவருக்கு இடையிலான மோதலில், வகுப்பறையில் வைத்தே பரபரப்பு சம்பவம்...
  • ஆவடி இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு..... கடந்த 2018-ல், ஆவடியைச் சேர்ந்த ஜெகதீசன், அவரது மனைவி ஸ்ரீமதி ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி....
  • ஐ.பி.எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில், டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை... டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பம்....
Tags:    

மேலும் செய்திகள்