காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- மதுரையில் வரலாறு காணாத மழையால், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பு.. 10 சென்டி மீட்டருக்கு மேல் கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாகின....
- ஆலங்குளம் கண்மாயில் இருந்து பெருக்கெடுத்த மழை வெள்ளம் மதுரை முல்லைநகருக்குள் புகுந்ததால் கடுமையான பாதிப்பு... உடமைகளை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக வெளியேறிய குடியிருப்புவாசிகள்.... மழைநீர்சூழ்ந்த வீட்டில் இருந்து படுத்த படுக்கையாக கிடந்த மூதாட்டியை தோளில் சுமந்து மீட்ட உறவினர்கள்.....
- மதுரையில் 70 ஆண்டுகளுக்குப் பின் அக்டோபர் மாதத்தில் கொட்டித் தீர்த்த அதி கனமழை.. மதுரை ஆத்திகுளம், வளர் தெரு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பாதிப்பு....
- வெள்ளம் பாதித்த பகுதிகளில் மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் நேரில் ஆய்வு.... அதிகாரிகள் ஒருசில இடங்களை மட்டும் ஆய்வு செய்துவிட்டு சென்றதாக பாதிக்கப்பட்டவர்கள் ஆவேசம்....
- மதுரையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து காணொலி மூலம் துணை முதலமைச்சர் உதயநிதி ஆலோசனை.... மீட்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்......
- கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மதுரை கிழக்கு, மதுரை வடக்கு வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.... கனமழையால், தேனி மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிப்பு....
- தொடர்மழையால் குற்றால அருவிகளில் இரவு முழுவதும் வெள்ளப்பெருக்கு... பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிப்பு....
- திராவிட நல் திருநாடு என்று பாடினால் நாக்கு தீட்டாகி விடுமா...? அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காகவே, திராவிட இனமும், கருப்பர் இனமும் தோன்றியதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...
- துணை முதலமைச்சர் உதயநிதி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது ஏன் என பாஜக மூத்தத் தலைவர் எச்.ராஜா கேள்வி.... முதலமைச்சரை புண்படுத்த வேண்டும் என்பது தனது நோக்கமல்ல என்றும் பேட்டி....
- எமர்ஜிங் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்தியா ஏ அணி தோல்வி.... 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆப்கானிஸ்தான் ஏ அணி....
- இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி... நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது...