காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-24 01:02 GMT
  •  டானா புயல் எதிரொலியாக மேற்கு வங்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..... இன்றும், நாளையும் கொல்கத்தா விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிப்பு..
  • குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.... தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...
  • தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை..... தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி...
  • மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழையால், செல்லூர் கண்மாயில் இருந்து வழிந்தோடும் வெள்ளநீர்... குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் கழுகுப் பார்வை காட்சி...
  • மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தளபதியை, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு...செல்லூரில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் ஆவேசம்...
  • கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரிக்குள் புகுந்த மழைநீர்... ஆய்வகங்கள், தொழிற்கூடங்கள் மற்றும் ஆசிரியர்கள் அறைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பாதிப்பு...
  • வங்கக்கடலில் தீவிர புயலாக மாறியது டானா... ஒடிசா - மேற்குவங்கம் இடையே இன்று இரவு கரையை கடக்கும் எனத் தகவல்.... புயல் கரையைக் கடக்கும்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை......
  • இந்தியா- சீனா இடையிலான உறவு இருநாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது, உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு அவசியமானது... எல்லைப்புறத்தில் அமைதி நிலவ வேண்டியது அவசியம் என, இருதரப்பு பேச்சுவார்த்தையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், பிரதமர் மோடி வலியுறுத்தல்...
  • மும்பையில் கங்குவா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியின்போது சூப்பர் ஸ்டார் என அழைத்த தொகுப்பாளருக்கு நடிகர் சூர்யா சுவாரஸ்ய பதில்............ ஒருவரின் பெயரையும், அடையாளத்தையும் பறிக்கக் கூடாது என அதிரடி.......
  • இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் இன்று தொடக்கம்... முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் வெற்றி பெற இந்தியா தீவிரம்...
Tags:    

மேலும் செய்திகள்