காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- தமிழகத்தில் அநேக இடங்களில், நாளை மறுநாள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு... 23ம்தேதி வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்....
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை... குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி...
- திருப்பூர் மாநகரில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலையில் பெருக்கெடுத்த மழைநீர்... தீபாவளி பண்டிகை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை...
- தமிழகம் முழுவதும் கடைவீதிகளில் களை கட்டிய மக்கள் கூட்டம்... தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள் வாங்க ஆர்வம்...
- தீபாவளி பண்டிகைக்கு காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி... அதிக ஒலி எழுப்பக்கூடிய, தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்குமாறு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்...
- தமிழகத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் வி.கே.சிங் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்..... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது...
- அனைத்து மகளிருக்கும் கட்டாயம் உரிமைத்தொகை வழங்கப்படும்... துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி...
- கனவு ஆசிரியர் விருதை பெற்ற 55 அரசுப்பள்ளி ஆசிரியர்கள், வரும் 23 ம் தேதி பிரான்ஸ் நாட்டுக்கு பயணம்... ஆறு நாட்கள் கொண்ட சுற்றுலாவில் ஆசிரியர்களை அழைத்துச் செல்கிறார், அமைச்சர் அன்பில் மகேஷ்... கடல் தாண்டி நாம் பெறும் பெருஞ்செல்வம் கல்வியைத் தவிர வேறொன்று உண்டா? என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து...
- தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளே, அரசின் குறைகளை சுட்டிக் காட்ட தொடங்கி விட்டன... புகைச்சல் ஆரம்பித்து விட்டது... அ.தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...
- நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசம்... தமிழ்த்தாய் வாழ்த்தை ஏற்றுக்கொள்ள முடியாத சீமானை, எப்படி தமிழராக ஏற்றுக்கொள்ள முடியும்...? என தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி...
- மகளிர் டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது நியூசிலாந்து அணி.... இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி...
- நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு.... தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு....