இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (06-11-2023)

Update: 2023-11-06 16:03 GMT
  • இலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்த்து செய்தி புறக்கணிக்கப்பட்ட விவகாரம்...அமைச்சர் தங்கம் தென்னரசு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் இன்று கண்டனம்...காணொளி தாமதமாக கிடைத்ததால் ஒளிபரப்ப முடியவில்லை என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம்...
  • சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது...சென்னை உயர் நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டு...தனது கருத்தை மாற்றிக் கொள்ளப்போவதில்லை என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திட்டவட்டம்...
  • சென்னையில் பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் இன்று கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை...விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு நடவடிக்கை...
  • மாலத்தீவு கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 12 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கடிதம்...
  • தீபாவளிக்கு மறுநாள் பொதுவிடுமுறைதீபாவளிக்கு மறுநாள் திங்கள்கிழமையும் பொதுவிடுமுறை...பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு இன்று அறிவிப்பு...
Tags:    

மேலும் செய்திகள்