இந்தி மொழிக்கு ஆதரவாக தமிழகத்தை சீண்டிய பவன் கல்யாண்.. நெத்தியடி பதிலடி கொடுத்த பிரகாஷ் ராஜ்

Update: 2025-03-15 02:46 GMT

இந்திமொழி குறித்த தமிழகத்தின் நிலைப்பாட்டை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விமர்சித்துள்ளார். ஹைதராபாத்தில் ஜனசேனா கட்சியின் 12-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சித் தலைவரும், ஆந்திர துணைமுதல்வருமான பவன் கல்யாண், நிதி ஆதாயத்திற்காக தங்கள் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய அனுமதிக்கும் அதே வேளையில், தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ், ஹிந்தி மொழியை எங்க மேல திணிக்காதீங்க"ன்னு சொல்றது வேறு மொழியை வெறுப்பதில்லை எனவும்"நம்முடைய தாய்மொழியையும், நம்ம தாயையும் சுயமரியாதையோட பாதுகாப்பதாகும் என பதிலளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்