Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-10-2023)

Update: 2023-10-27 00:55 GMT
  • இஸ்ரேலின் டெல்அவிவ் நகர் மீது காசாவில் இருந்து ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலின் பரபரப்பு காட்சிகளை பதிவு செய்தது, தந்தி டி.வி...எச்சரிக்கை சைரன் ஒலித்ததும், உயிருக்கு அஞ்சி ஓட்டம் பிடித்த, டெல் அவிவ் நகர மக்கள்...
  • ஹமாஸ் அனுப்பிய ஏவுகணையை வானிலேயே வழி மறித்து அழித்த, இஸ்ரேலின் 'அயன் டோம்' பாதுகாப்பு...இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையிலான போர்க்களத்தில், தந்தி டி.வி பதிவு செய்த பதற்றமான காட்சிகள்...
  • 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு...சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றனர்...
  • சென்னை ஆளுநர் மாளிகையில் குடியரசு தலைவர் முர்மு தங்கியுள்ளார்...இந்திய கடல்சார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் இன்று பங்கேற்கிறார்...
  • குண்டு வீச்சு தொடர்பாக, ஆளுநர் மாளிகை அளித்த புகாரை பதிவு செய்யவில்லை என சென்னை காவல்துறை மீது ஆளுநர் மாளிகை விமர்சனம்...குண்டு வீச்சின் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்த தவறி விட்டதாகவும், விசாரணை தொடங்கப்படும் முன்னரே கொல்லப்பட்டிருப்பதாகவும் கண்டனம்...
  • ஆளுநர் சார்பில் அளித்த புகார், முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என காவல்துறை மறுப்பு...ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் குண்டு வீச வரவில்லை எனவும், தனி நபராக வந்தவரையும் போலீசார் சாதுர்யமாக கைது செய்ததாகவும் விளக்கம்..
  • கைதான கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தவர் பா.ஜ.க. வழக்கறிஞர் என அமைச்சர் ரகுபதி அதிர்ச்சி தகவல்.....சென்னையில் பா.ஜ.க. அலுவலகம் மீது குண்டு வீசிய வழக்கிலும் அவர்தான் ஜாமினில் எடுத்தார் என்றும் குற்றச்சாட்டு
Tags:    

மேலும் செய்திகள்