ஆளுநரால் காலாவதியான அவசர சட்டம் - தமிழக அரசு இனி என்ன செய்யலாம்? | Online Rummy
ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டு மரணங்களை தடுக்க, தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றி கடந்த மாதம் ஒன்றாம் தேதி ஆளுநர் ஒப்புதலை பெற்றது. இந்த தடையை நிரந்தரமாக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் விளக்கம் கோரியதும், அதற்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. இதற்கிடையே ஏற்கனவே கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டம் காலாவதியாகியிருக்கிறது.இதனால் ஏற்படும் விளைவுக்கு ஆளுநரே பொறுப்பு ஏற்க வேண்டும் என அரசு தரப்பு தெரிவிக்கிறது.