குமரி கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்fளது. அதன்படி நெல்லை மாநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையில் இருந்து மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது நெல்லை சந்திப்பு டவுன் வக்கிரகுளம் வண்ணாரப்பேட்டை பாளையங்கோட்டை தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான களக்காடு பத்மநேரி கொண்டா நகரம் சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. நாளை முதல் பெய்து வரும் கனமழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்