5 கோடீஸ்வரர்களை பலி கொண்ட டைட்டன் கப்பல்.. உலகை உலுக்கிய மர்மம் அவிழ போகிறது
5 பேரை பலி கொண்ட டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் சிதைந்த பாகங்கள் அட்லாண்டிக் கடலின் ஆழமான பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. அவை கனடாவின் ஆர்டிக் ஹாரிசான் கப்பல் மூலம் செயின்ட் ஜான்ஸ் நியூபவுண்ட் லேண்ட் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் சிதைந்த பாகங்கள் கிரேன் மூலம் வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டன. அட்லாண்டிக் கடலில் ஆயிரத்து 600 அடி ஆழத்தில் இருந்த மீட்கப்பட்ட சிதைந்த பாகங்களை அமெரிக்கா மற்றும் கனடாவை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். அதன் முடிவில் டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்துக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.