3-வது நாளாக பற்றி எரியும் குப்பை கிடங்கு - விண்ணை முட்டும் புகை மண்டலம்
- திருவண்ணாமலையில் நகராட்சிக்குட்பட்ட குப்பை கிடங்கு தொடர்ந்து 3வது நாளாக தீப்பற்றி எரிவதால் பொதுமக்கள் மற்றும் கிரிவல பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட குப்பை கிடங்கு ஈசான மைதானத்திற்கு அருகே அமைந்துள்ளது.
- இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால் இதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்நிலையில், இந்தக் குப்பை கிடங்கில் தற்போது இரண்டாவது நாளாக தொடர்ந்து தீப்பற்றி எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
- இதில் வெளியாகும் புகையினால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கேரளா மாநிலத்தில் உள்ள குப்பை கிடங்கு கடந்த ஒரு வாரமாக தீப்பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது.