திருவண்ணாமலை 8-ஆம் நாள் தீப திருவிழா.. வான வேடிக்கையுடன்.. பிச்சாண்டவர் உற்சவம்
திருவண்ணாமலையில் மகா தீபத்திருவிழாவின் 8 ஆம் நாள் உற்ச்சவத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த தீபத்திருவிழாவின் 8 ஆம் நாளில் சாமி பிச்சாண்டவரின் உற்ச்சவம் வான வேடிக்கையுடன் நடைபெற்றது. இதில் தங்க மேரு வாகனத்தில் நகர் வீதிகளில் நடைபெற்ற பிச்சாண்டவர் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.