40 தீர்மானங்களை பத்தே நிமிடங்களில் முடிந்த நெல்லை மாநகராட்சி கூட்டம் | Tirunelveli
நெல்லை மாநகராட்சியில் 5 சிறப்பு தீர்மானங்கள் உட்பட 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, பத்தே நிமிடங்களில் கூட்டம் முடிவடைந்தது.
திருநெல்வேலி மாநகராட்சி புதிய மேயராக ராமகிருஷ்ணன் பதவியேற்று மூன்றாவது கூட்டம், மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் அரசு பொருட்காட்சி அமைக்க 10 ஏக்கர் நிலம் வாங்குவது, மாநகராட்சி அலுவலக விரிவாக்கத்திற்கு 5 ஏக்கர் நிலம் வாங்குவது உள்ளிட்ட 5 சிறப்புத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும், 26 அவசரக் கூட்ட தீர்மானங்கள் உட்பட 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால் மாநகராட்சி கூட்டம் 10 நிமிடங்களில் முடிவடைந்தது. இதனிடையே, தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ், துப்புரவுப் பணிகள் தனியாருக்கு தாரை வார்த்ததாகக்கூறி பணியாளர் சீருடையுடன் வந்ததால் பரபரப்பு நிலவியது