புலியை சமைத்து ஊரே பங்கு போட்டு சாப்பிட்ட கொடூரம்... அதிர்ந்து போன வனத்துறை...

Update: 2023-02-20 12:27 GMT
  • ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்த புலியை சமைத்து சாப்பிட்டவர்களை கைது செய்ய வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

  • ஆக்கபள்ளம் கிராம விவசாயிகள் விளைநிலங்களில் வனவிலங்குகள் புகுந்து சேதம் விளைவிக்காமல் தவிர்ப்பதற்காக சட்டத்துக்கு புறம்பான வகையில் மின்சார வேலி அமைத்துள்ளனர்.
  • கடந்த 4 நாட்களுக்கு முன் ஆக்கபள்ளம் அருகே வனப்பகுதியில் பெண் புலி ஒன்றின் கால் தடத்தை கண்டுபிடித்த வனத்துறை அதிகாரிகள் புலி நடமாட்டத்தை கண்டுபிடிப்பதற்காக அந்த பகுதியில் கேமராக்களை பொருத்தி இருந்தனர்.
  • ஆனால் அதற்கு முன்னதாகவே அந்த புலி மின்சாரம் தாக்கி இறந்து கிராம மக்களுக்கு உணவாகி விட்டது.
  • புலியின் கறியை பங்கு போடுவதில் ஆக்கப்பள்ளம் கிராம மக்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டு இந்த விஷயம் வனத்துறையினருக்கு தெரிய வந்தது.
  • அக்கிராமத்திற்கு நேற்று சென்ற வனத்துறையினர் புலி மாமிசம் சாப்பிட்டவர்கள் என்று கருதப்படும் சிலரை வனத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்ல முயன்றனர்.
  • இதனால் கிராம மக்களுக்கும் வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
  • இந்நிலையில், 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவர்கள் புலிக்கறி சாப்பிட்டதை ஒப்புக் கொண்டனர்.
  • மேலும் புலி தோலை அங்குள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் வீசிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
  • இதன் அடிப்படையில் புலித்தோலை மீட்க வனத்துறையினர் முடிவு செய்துள்ள நிலையில், புலி மாமிசம் சாப்பிட்ட மேலும் பலர் அந்த கிராமத்தில் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அவர்களையும் கைது செய்யும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்