மது, மாது, சூது என வாழ்ந்த அண்ணனை.. தம்பியே கம்பியால் அடித்து கொன்ற கொடூரம்! - பகீர் கிளப்பும் கொலையின் பின்னணி

Update: 2023-04-03 04:30 GMT
  • தூத்துக்குடி சில்லா நத்தம் பகுதியை சேர்ந்தவர் நல்ல தம்பி. சொந்தமாக லாரி தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
  • ஒரு பக்கம் வியாபாரத்தில் பணம் பார்த்த நல்லதம்பி, அந்தப் பணத்தை வைத்து உல்லாச வாழ்க்கை வாழ நினைத்துள்ளார்.
  • அதன்படி, மது, மாது, சூது என அனைத்து தீய பழக்கங்களும் அவருக்கு இருந்ததாக சொல்லப்படுகிறது.
  • ஒரு கட்டத்தில் இந்த தீய பழக்கங்களுக்கு அடிமையாகிய நல்லதம்பி, அதன் விளைவாக சொந்த தொழிலை விட்டுள்ளார்.
  • அது மட்டுமல்லாமல், ஆன்லைன் ரம்மியில் மிகுந்த ஈடுபாடுடன் விளையாடியதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, மனைவியின் நகை என எல்லா பணத்தையும் இழந்த நல்லதம்பி, வீட்டில் பணம் கேட்டும் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
  • உல்லாச வாழ்க்
  • கை போதையில் இருந்து வெளியே வர எண்ணாத நல்லதம்பி, அதற்காக தனது தம்பியான முத்துராஜிடம், தினமும் பணம் கேட்டு தொந்தரவு செய்யவே, அடிக்கடி பணம் கொடுத்து வந்துள்ளார் முத்துராஜ்.
  • நல்லதம்பியின் நடவடிக்கையால், குடும்பத்தில் இருந்தவர்கள் அதிருப்தியில் இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் குடும்பத்தினரே, நல்லதம்பியை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளனர்.
  • இந்தநிலையில், முத்துராஜ், தனது சித்தப்பாவின் மகனான மற்றொரு முத்துராஜூடன் சேர்ந்து, தூத்துக்குடி சிப்காட் காவல்நிலைய எல்லைக்கு உட்பட காட்டுப் பகுதிக்கு, மதுகுடிக்க நல்லதம்பியை அழைத்துள்ளனர். அப்போது, அங்கு வந்த நல்ல தம்பியை, இருவரும் சேர்ந்து இரும்பு கம்பியால் தலையில் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  • இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முத்துராஜ் மற்றும் சித்தப்பாவின் மகனான மற்றொரு முத்துராஜூம், நடந்த விவரங்களைக் கூறி, காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.
  • இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்று, நல்லதம்பியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  • மது, மாது, ஆன்லைன் ரம்மி என அனைத்திலும் பணத்தை இழந்து, குடும்பத்திற்கு பாரமாக பொறுப்பற்ற முறையில் இருந்து வந்த அண்ணனை, சொந்த தம்பியே விரக்தியில் கொலை செய்த சம்பவம், அந்தப் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்