போலீஸ் முன் நாட்டுத் துப்பாக்கி வீசிய மூன்று பேர் - திருவள்ளூரில் பயங்கரம்

Update: 2023-06-30 02:47 GMT

திருவள்ளூரில், புதரில் வீசப்பட்ட நாட்டுத் துப்பாக்கியை போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாயுடு குப்பம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், போலீசாரைக் கண்டதும் அவர்கள் கொண்டு வந்த பையை புதரில் வீசி தப்பிச் சென்றனர். போலீசார் அந்தப் பையை மீட்டு பார்த்த போது, அதில் நாட்டுத் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்