"தி கேரளா ஸ்டோரி படத்தை எதிர்ப்பவர்கள் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள்" - மத்திய அமைச்சர்
'தி கேரளா ஸ்டோரி' படத்தை எதிர்ப்பவர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஆதரிப்பவர்கள் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சோனா நகரில் நடைபெற்ற மகாரானா பிரதாப் ஜெயந்தி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசினார். 'தி கேரளா ஸ்டோரி' ஒரு சாதாரன படம் அல்ல என்ற அனுராக் தாகூர், பெண்களை பயங்கரவாதத்திற்கு இழுக்கும் சிலரது முகத்தை இந்த படம் வெளிச்சமிட்டு காட்டியுள்ளதாக தெரிவித்தார். சில அரசியல் கட்சிகள் இந்த படத்தை எதிர்ப்பதாகவும், அவர்கள் போராட்டம் நடத்தினால், பி.எஃப்.ஐ, பயங்கரவாதம் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளை ஆதரிப்பவர்களாக இருப்பார்கள் என குற்றம் சாட்டினார்.