- தூத்துக்குடியில், காவலர்களுக்கு வழங்கப்பட்ட புதிய வாகனத்தில், மகளிர் உதவி எண்ணுக்கு பதிலாக, எச்ஐவி எண் தவறுதலாக எழுதப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மாநகராட்சி மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வளர்களுக்கு ஏழு புதிய வாகனங்கள் வழங்கப்பட்டன.
- இந்த வாகனங்களின் பின்னால், பொது மக்கள் பயன்பெறும் வகையில், சில உதவி எண்கள் எழுதப்பட்டுள்ளன.
- இதில், மகளிர் உதவி எண்ணான ஒன்று பூஜ்ஜியம் ஒன்பது ஒன்றுக்கு பதிலாக, எச்ஐவி உதவி எண்ணான ஒன்று பூஜ்ஜியம் ஒன்பது ஏழு என்ற எண் எழுதப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.