வரலாற்றில் இதுவே முதல் முறை..பூமியை விட்டு வானில்...அசாத்தியத்தை சாத்தியமாக்கிய பெண்
சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் முதன் முதலாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் ஆக்சியாம் ஸ்பேஸ் என்ற நிறுவனம், விண்வெளி வீரர்கள் அல்லாத பொதுமக்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பயணத்திற்கு சவுதி அரேபியா அரசு நிதியுதவி செய்கிறது. அந்நாட்டைச் சேர்ந்த மார்பக புற்றுநோய் ஆய்வாளரான ரயானா பர்னாவி என்ற பெண்ணும், சவுதி போர் விமான பைலட்டான அலி அல்குவார்னி என்பவர் உள்பட 4 பேர் சர்வதேச விமாநிலையத்திற்கு சென்றுள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பால்கன் 9 ராக்கெட் மூலம் அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்தனர். அவர்கள் அங்கு ஒரு வாரம் தங்கியிருந்த பின் பூமிக்கு திரும்ப உள்ளனர்.