"இது இந்தியாவின் வளர்ச்சி மீது நடத்தப்பட்டுள்ள திட்டமிட்ட தாக்குதல்" - ஹிண்டன்பர்க் அறிக்கை மீது அதானி பரபரப்பு குற்றச்சாட்டு

Update: 2023-01-30 16:39 GMT

அமெரிக்க ஆய்வு நிறுவனமாக ஹிண்டன்பர்க் அறிக்கையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, அதானி குழுமம் பதில் அளித்துள்ளது...

இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள 413 பக்க பதில் அறிக்கையில், ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதான தாக்குதல் அல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி மீது, திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என குற்றம்சாட்டியுள்ளது.

ஹிண்டன்பர்க் எழுப்பிய 88 கேள்விகளில் 65 கேள்விகளுக்கு ஏற்கெனவே விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 23 கேள்விகளில் 18 கேள்விகள், அதானி குழுமம் மற்றுன் அதன் பங்குதாரர்களுக்கு தொடர்பில்லாதவை எனவும், விளக்கியுள்ளது.

மேலும், மீதமுள்ள 5 கேள்விகள் எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இன்றி, கற்பனையான தரவுகளை கொண்ட குற்றச்சாட்டுகள் என, அதானி குழுமம் அந்த அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்