திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமர்ந்து சாமியார் செய்த பகீர் செயல் - அதிர்ந்து போன பக்தர்கள்
திருவண்ணாமலையில், பல ஊர்களில் இருந்து வரும் சாமியார்கள், கிரிவலப் பாதையில் குடில்கள் அமைத்து, ஆசிரமங்களில் தரும் உணவுகளை சாப்பிட்டு வசித்து வருகிறார்கள். 500-க்கும் மேற்பட்ட சாமியார்கள் வாழ்ந்து வரும் நிலையில், கிரிவலப் பாதையில் பல இடங்களில் கஞ்சா, சாராயம் உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களில் யாசகம் பெறும் சாமியார்கள், இரவு நேரங்களில் கஞ்சா, சாராயம் மற்றும் மதுபானங்களை வாங்கி வந்து அருந்துவது சகஜமாக மாறியுள்ளது. இந்த நிலையில், 2 நாள்களுக்கு முன் கிரிவலப்பாதையில் உள்ள கற்பக விநாயகர் திருக்கோயில் வாசல் படியில் அமர்ந்து சாமியார் ஒருவர் மதுபானம் அருந்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.