டெங்கு காய்ச்சலுக்கு அண்ணன் பலி, தங்கைக்கு தீவிர சிகிச்சை; பீதியில் திருவள்ளூர் மக்கள்
- திருத்தணி அருகே காய்ச்சலுக்கு உயிரிழந்த சிறுவனின் கிராமத்தில், சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர்.
- திருவள்ளூர் மாவட்டம் காசிநாதபுரத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன்.
- இவரது 7 வயது மகன் தேவகுமார், காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த10 ம் தேதி உயிரிழந்தார்.
- இந்தநிலையில் தேவகுமாரின் தங்கைக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இதனையடுத்து அவருக்கு எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- இதன் எதிரொலியாக காசிநாதபுரத்தில் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில், மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டு, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகளிலும் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.