வைகையின் அசுத்தமான நீரில் இறக்கப்பட்ட திருமால் அழகர் - பக்தர்கள் அதிர்ச்சி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திருமால் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. திருப்புவனம் கோட்டையில் உள்ள திருமால் அழகர் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு திருமால் அழகர் காட்சி அளித்தார். தொடர்ந்து, பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷத்திற்கு இடையே திருமால் அழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.