"காசி-தமிழ்நாடு இடையே தொப்புள்கொடி உறவு உள்ளது"-"இதனை ஆங்கிலேயர்கள் சிதைத்தனர்"-ஆளுநர் ஆர்.என்.ரவி

Update: 2022-11-26 02:50 GMT

காசிக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையே இருந்த தொப்புள் கொடி உறவை ஆங்கிலேயர்கள் சிதைத்ததாக தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி விமர்சித்துள்ளார்

சென்னை மைலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் அரங்கில் பவன்ஸ் கலாசார விழா 2022 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்றார். உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், திரைப்பட பின்னணி பாடகர் வாணி ஜெயராம், தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு இசைத்துறையில் சிறந்த பங்களிப்பு செய்ததுக்காக பவன்ஸ் விருதையும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் ஆளுநர் வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 1930- களில் ஆங்கிலேயர்கள், அரசியல், பொருளாதார கலாசார மற்றும் ஆன்மீக ரீதியில் இந்தியாவை சிதைத்ததாக குற்றம் சாட்டினார். இந்தியர்களிடம் இருந்த கலாசார, ஆன்மீக ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் சிதைத்ததாக ஆளுநர் புகார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்