திடீரென்று போரூர் ஏரியில் குதித்த இளைஞர்..! - பலமணிநேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்பு... விசாரணையில் வெளியான தகவல்...
பூந்தமல்லி அடுத்த மேல்மனம்பேடு பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் வசந்தராஜ்.
இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, லாரிக்காக வங்கியில் வங்கிய கடனை சரிவர கட்டவில்லை என கூறப்படுகிறது.
இதனால், பைனான்ஸ் நிறுவனத்தினர் லாரியை கைப்பற்றி சென்றதால் வசந்தராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், போரூர் ஏரி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற வசந்தராஜ், தீடீரென ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு உடலை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் நடத்தி வருகின்றனர்.