உலகமே கொண்டாடிய சார்ல்ஸ் டயானா திருமணம்.!!

Update: 2022-07-29 10:43 GMT

உலகமே கொண்டாடிய சார்ல்ஸ் டயானா திருமணம்.!!

பேரழகியும், சமூக ஆர்வலருமான டயானாவும், பிரிட்டன்

ராணி எலிசபத்தின் மூத்த மகனான இளவரசர் சார்லசும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

1981ல் அவர்களுக்கு திருமணம் நடந்த போது சார்லசுக்கு 33 வயது, டயானாவிற்கு 20 வயது தான். அதுவரை இல்லாத அளவிற்கு மிகக் கோலாகலமாக நடைபெற்ற அரசு குடும்ப திருமணம் இவர்களின் திருமணம் தான்.

லண்டனில் உள்ள புகழ்பெற்ற செயின்ட் பால் தேவாலயத் தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் பல்வேறு நாட்டு தலைவர்கள் உள்ளிட்ட, 3,500 விருந்தினர்கள் நேரில் கலந்து கொண்டனர். இந்த திருமணத்தை உலக அளவில் 75 கோடி பேர், தொலைகாட்சி மூலம் கண்டு களித்தனர்.

தேவாலயத்திற்கு சாரட் வண்டியில் மணமகள் ஊர்வலமாக அழைத்தச் செல்லப்பட்ட பாதையில் சுமார் 20 லட்சம் பேர் நின்று பார்த்தனர். 4,000 காவல் துறையினரும், 2,200 ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணிகள் ஈடுப்பட்டனர். மொத்த திருமண செலவு சுமார் 11 கோடி டாலர் என கணிக்கப் பட்டது.

திருமணத்திற்கு பிறகு லேடி டயனாவிற்கு வேல்ஸ் இளவரசி பட்டம் அளிக்கப்பட்டது. ஆனால் இவ்வளவு கோலகலமாக திருமணம் செய்த தம்பதியினர், 15 ஆண்டுகளுக்கு பிறகு, 1996ல் விவகாரத்து பெற்றது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

1997ல் பாரிஸில் நடந்த கார் விபத்தில் இளவரசி டயானா உயிரிழந்தார். இளவரசர் சார்லஸ், லேடி டயானா திருமணம் நடைபெற்ற தினம், 1981 ஜூலை 29.

Tags:    

மேலும் செய்திகள்