காதலனுடன் ஓடி விட்டு... மீண்டும் வீடு திரும்பிய மனைவி... கணவரின் வெறிச் செயல்

Update: 2022-12-19 13:30 GMT

மத்தியப்பிரதேசம் மாநிலம் அலோட்டில், கணவனை விட்டு காதலனுடன் சென்ற பெண்ணை, அவரது கணவர் மற்றும் 7 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கி உள்ளனர். காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறி பெண், மீண்டும் மாமியார் வீட்டிற்கு வந்த நிலையில், ஆத்திரமடைந்த அவரது கணவர் மற்றும் அவரது நண்பர்கள், அந்த பெண்ணை மரத்தில் கட்டிவைத்து, கோடாரியால் கொடூரமாக தாக்கி உள்ளனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார், பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அவரது கணவர் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்