கள்ளக்காதலுக்கு தடையாய் இருந்த கணவனை கொன்ற மனைவி.. கூலிப்படையை சேர்ந்த பாஜக பிரமுகர் சரண்..!
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே, கள்ளக் காதலனுடன் சேர்ந்து, கூலிப்படை உதவியுடன் கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வெற்றிவேல், ரேவதி தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
வியாழக்கிழமை அதிகாலை வெற்றிவேல் மயக்க நிலையில் இருப்பதாக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், அவர் இறந்தவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, ரேவதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவருக்கும் வெற்றிவேலின் தங்கை கணவர் நாகராஜுக்கும் தகாத உறவு இருந்தது தெரியவந்தது.
இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், நாகராஜும், ரேவதியும் சேர்ந்து, மோட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ராஜேஷின் உதவியுடன் வெற்றிவேலை கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
இதற்காக ராஜேஷுக்கு 10 லட்ச ரூபாய் பேசப்பட்டு, முன்பணமாக 2 லட்ச ரூபாய் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, ரேவதி, நாகராஜ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ், சத்துவாச்சாரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.